நம்பிக்கையின் நேரம் வானொலி நிகழ்ச்சி
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வசந்தம் FM ஊடாக இரவு 7.45 முதல் 8.00 மணிவரை நம்பிக்கையின் நேரம் என்ற எமது வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாகின்றது. கிறிஸ்தவ பாடல்கள், நாடகங்கள், உரையாடல்கள், நற்சிந்தனைகள் மற்றும் கேள்வி பதில் பகுதி போன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்கலாம். இந்நிகழ்ச்சிகள் மூலமாக நூற்றுக்கணக்கானோர் தேவ ஆசிர்வாதத்தை பெறுகிறார்கள். நீங்களும் இந்நிகழ்ச்சிகளை கேட்டு கடவுளின் ஆசிர்வாதத்தை பெறுவதோடு மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம்.