தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் தபால் மூலமாக வேதபாடங்கள் கற்பிக்கப்படுகின்றது. கிறிஸ்தவ மார்க்கத்தின் அடிப்படை போதனைகளை இலகுவாக கற்று விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் இப்பாடத்திட்டங்கள் தயாரிக்கப் பட்டிருக்கின்றது. பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு கதைகள் அடங்கிய வேதப்பாடங்கள் சிறுவர்களுக்காக அமைக்கப் பட்டுள்ளதோடு வான்மலர், உத்தம வாழ்க்கை மற்றும் பகிர்ந்தளிக்கும் வாழ்வு போன்ற தலைப்புகளில் கிறிஸ்தவர்களுக்கும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கும் மிகவும் பயனுள்ள விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேதபாடத் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் ஒவ்வொருவருக்கும் நற்சான்றிதழ்களும், பரிசுப் புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றது. இந்த வேதபாடத்திட்டம் குறித்து மேலதிகமாக அறிந்துகொள்ள எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.